திங்கள், 20 ஜூலை, 2009






ஐயையோ! என் கார்ட்லேர்ந்து யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்க! Credit Card வைத்திருக்கும் 10 ல் மூவரின் குரல் மேலே கேட்டது. பெரும்பாலான மோசடிகள் Online Transaction வழியாகத்தான். Nigeria Scam உட்படப் பல யுக்திகளில் அமெரிக்காவிலோ, ஆப்ரிக்காவிலோ ரூம்போட்டு யோசித்துச் செய்யப்படும் முறைகேடுகள். இவற்றிலிருந்து காத்துக் கொள்ள கூகிள் சில வழிகளைச் சொல்கிறது. இதை மீறியும் இழந்தால் Card வைத்துக் கொள்ளாமலிருக்கவும்.

ஏமாற்றுபவர்கள் கமலஹாசனைவிட அதிக அவதாரங்கள் எடுப்பவர்கள். பயனாளர்களை ஏமாற்ற நம்பகமான தளங்களிலிருந்து விளம்பரங்களை வாங்கித் தங்கள் தளங்களில் காண்பிப்பார்கள். இந்தத் தளங்களில் உங்கள் கார்ட் எண்ணையோ, இதர வங்கிக் கணக்கையோ கொடுத்தால் அடுத்த வேளை உணவுக்கு நண்பனிடம் கடன் வாங்குவதைத் தவிர வழியில்லை!



எப்படிக் கண்டுகொள்வது?

# Credit Card / Debit Card தகவல்களைத் தரும்முன்பு தளத்தைப் பற்றி இணையத்தில் நன்கு தேடவும். நண்பர்களின் கருத்தையும் கேட்கலாம்.

# கூகிளோ, மற்ற நிறுவனங்களோ தரும் இலவச சேவைகளுக்குக் கட்டணம் கேட்டால் அவர்கள் மன்னார் & கம்பெனியேதான். உடனே ஓடிவிடவும்.


# Adwords, Adsense இவற்றையும் மீறி ஆட்டையைப் போடும் மக்கள் நிறைய! பணத்தை யாரிடமோ இழந்துவிட்டு கூகிளைச் சபிக்க வேண்டாம். Adwords உள்ளிட்ட பணவிஷயங்களைப் படித்துவிடுவது நல்லது.

# "cash," "pay day," "money," "secrets," "home business," என்ற கவர்ச்சிக் கன்னிகளுக்கு மயங்க வேண்டாம். உண்மையாய் உழைத்தால் போதும். வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம் என்று சொல்வது அவர்களைப் பற்றி! நீங்கள் தளத்தில் இணைந்தாலோ, அவர்கள் சொல்வதைச் செய்தாலோ அவர்கள் வீட்டிலிருந்து அவர்கள் சம்பாதிப்பார்கள்.

# கூகிள் லாட்டரி ஏஜென்சி அல்ல! லாட்டரியில் பணம், Account NO கொடுங்கள் என்று கூகிளின் பெயரில் வந்தாலும் தரவேண்டாம். (கூகிளுக்கே இம்மாதிரி மெயில்கள் போயிருக்கின்றன!)


என்ன செய்யலாம்?

# சந்தேகத்துக்குரிய தளம் Google பெயரை எங்கு குறிப்பிட்டிருந்தாலும் கூகிளுக்குத் தெரியப்படுத்தவும். (Yahoo என்றால் அவர்களுக்கு!).

# சந்தேகமான நடவடிக்கைகள் என்று உங்களுக்குத் தோன்றினால், தொடர்ந்து தொல்லைகள் வந்தால் phishing@google.com




# Cyber Crimes ன் தலைமையகம் அமெரிக்கா! அமெரிக்கத் தளங்கள் குறித்த புகார்களுக்கு:


http://www.ftc.gov/ftc/contact.shtm
call 1-877-FTC-HELP,
or write to:
Federal Trade Commission
CRC-240
Washington, D.C. 20580

இத்தனைக்குப் பிறகும் ஏமாந்தால், Internet பக்கமே போகாமலிருக்கவும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக