திங்கள், 20 ஜூலை, 2009






ஐயையோ! என் கார்ட்லேர்ந்து யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்க! Credit Card வைத்திருக்கும் 10 ல் மூவரின் குரல் மேலே கேட்டது. பெரும்பாலான மோசடிகள் Online Transaction வழியாகத்தான். Nigeria Scam உட்படப் பல யுக்திகளில் அமெரிக்காவிலோ, ஆப்ரிக்காவிலோ ரூம்போட்டு யோசித்துச் செய்யப்படும் முறைகேடுகள். இவற்றிலிருந்து காத்துக் கொள்ள கூகிள் சில வழிகளைச் சொல்கிறது. இதை மீறியும் இழந்தால் Card வைத்துக் கொள்ளாமலிருக்கவும்.

ஏமாற்றுபவர்கள் கமலஹாசனைவிட அதிக அவதாரங்கள் எடுப்பவர்கள். பயனாளர்களை ஏமாற்ற நம்பகமான தளங்களிலிருந்து விளம்பரங்களை வாங்கித் தங்கள் தளங்களில் காண்பிப்பார்கள். இந்தத் தளங்களில் உங்கள் கார்ட் எண்ணையோ, இதர வங்கிக் கணக்கையோ கொடுத்தால் அடுத்த வேளை உணவுக்கு நண்பனிடம் கடன் வாங்குவதைத் தவிர வழியில்லை!



எப்படிக் கண்டுகொள்வது?

# Credit Card / Debit Card தகவல்களைத் தரும்முன்பு தளத்தைப் பற்றி இணையத்தில் நன்கு தேடவும். நண்பர்களின் கருத்தையும் கேட்கலாம்.

# கூகிளோ, மற்ற நிறுவனங்களோ தரும் இலவச சேவைகளுக்குக் கட்டணம் கேட்டால் அவர்கள் மன்னார் & கம்பெனியேதான். உடனே ஓடிவிடவும்.


# Adwords, Adsense இவற்றையும் மீறி ஆட்டையைப் போடும் மக்கள் நிறைய! பணத்தை யாரிடமோ இழந்துவிட்டு கூகிளைச் சபிக்க வேண்டாம். Adwords உள்ளிட்ட பணவிஷயங்களைப் படித்துவிடுவது நல்லது.

# "cash," "pay day," "money," "secrets," "home business," என்ற கவர்ச்சிக் கன்னிகளுக்கு மயங்க வேண்டாம். உண்மையாய் உழைத்தால் போதும். வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம் என்று சொல்வது அவர்களைப் பற்றி! நீங்கள் தளத்தில் இணைந்தாலோ, அவர்கள் சொல்வதைச் செய்தாலோ அவர்கள் வீட்டிலிருந்து அவர்கள் சம்பாதிப்பார்கள்.

# கூகிள் லாட்டரி ஏஜென்சி அல்ல! லாட்டரியில் பணம், Account NO கொடுங்கள் என்று கூகிளின் பெயரில் வந்தாலும் தரவேண்டாம். (கூகிளுக்கே இம்மாதிரி மெயில்கள் போயிருக்கின்றன!)


என்ன செய்யலாம்?

# சந்தேகத்துக்குரிய தளம் Google பெயரை எங்கு குறிப்பிட்டிருந்தாலும் கூகிளுக்குத் தெரியப்படுத்தவும். (Yahoo என்றால் அவர்களுக்கு!).

# சந்தேகமான நடவடிக்கைகள் என்று உங்களுக்குத் தோன்றினால், தொடர்ந்து தொல்லைகள் வந்தால் phishing@google.com




# Cyber Crimes ன் தலைமையகம் அமெரிக்கா! அமெரிக்கத் தளங்கள் குறித்த புகார்களுக்கு:


http://www.ftc.gov/ftc/contact.shtm
call 1-877-FTC-HELP,
or write to:
Federal Trade Commission
CRC-240
Washington, D.C. 20580

இத்தனைக்குப் பிறகும் ஏமாந்தால், Internet பக்கமே போகாமலிருக்கவும்!

தகவல் தொழில்நுட்பத்துறையில இந்தியா முன்னேறிக்கிட்டு வருதுன்னு சொன்னாலும் பல நாடுகள்ல தண்ணிபட்ட பாடா இருக்குற மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமான "3 ஜி தொழில்நுட்பம் இன்னும் இந்தியாவுல முழுசா வந்தபாடில்ல.மற்ற நாடுகள்ல 3 ஜி போயி 4 ஜி தொழில்நுட்பத்த கொண்டுவர தயாராயிட்டு இருக்காங்க...

இந்த தொழில்நுட்பத்தை நாடு முழுவதுமுள்ள எல்லா மொபைல் ஆபரேட்டர்காரங்களும் கொண்டு வர்றப்போ அதோட புரட்சி பெரிய அளவுல இருக்குமுங்க...

சரி அப்படி என்ன ஸ்பெசலா இருக்கு இந்த 3 ஜியில,

* நாம இப்போ உபயோகப்படுத்துகின்ற தொழில்நுட்பம் 2.5 ஜி அலைவரிசை, இதனால பெரிய அளவுல டிஜிட்டல் சமாச்சாரங்கள நாம அனுபவிக்க முடியாது.

* ஆனா 3 ஜி தொழில்நுட்பம் பல புதிய டிஜிட்டல் வசதிகளை நமக்கு தரும்.

* 3G என்பது 3வது தலைமுறை மொபைல் வசதிகளைக்கொண்டது. சாதரணமா 2வது தலைமுறை மொபைல்கள் இணைய வசதி ஏற்படுத்த 30-200 KHZ அலைகளை மட்டுமே பயன்படுத்தும். ஆனால் 3G-யில் 15MHz அலைகள் வரை பயன்படுத்தப்படுவதால் அதிவேக இணையவசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியும். குறைந்தது 144Kbps வேகம் வரை இணையவசதியை கொடுக்கும்.அதிகபட்சமா 2mbps வேகம் வரைக்கும் இணைய வசதி கிடைக்கும். இதனால் வேகமாக தரவிறக்கம் செய்ய, கோப்புகளை அனுப்ப முடியும்.

* இப்போ நாம நமது லேப்டாப் அல்லது கணினியில மோடம் இல்லேன்னா வை-பை மூலமா இணைப்பு குடுத்து இன்டர்நெட் யூஸ் பண்ணிக்கிடிருக்கோம், ஆனா 3 ஜி தொழில்நுட்பத்துல பென்-டிரைவ் மாதிரியான ஒரு சாதனம் மூலமா நாம ஹை-ஸ்பீட் இன்டர்நெட் இணைப்பை பெறமுடியும்,"INTERNET STICK" என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தை நோக்கியா நிறுவனம் இப்போதே தயாரிக்க ஆரம்பித்து விட்டது. இது குறித்தான விபரங்களை இந்த http://europe.nokia.com/A41464148 லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம். இந்த STICK மூலமா நாமஎங்க வேணும்னாலும் தடையில்லா ஹை-ஸ்பீட் இன்டர்நெட் வேகத்தை பெறமுடியும்.

* நம்ம மொபைல்ல நம்ம கூட மறுமுனையில பேசுறவங்களோட முகத்தை பாத்துக்கிட்டே பேசலாம்.இத "video telephone" ன்னு சொல்வாங்க. "conference calling" வசதி இன்னும் சுலபமாகும்.

* வேகமான வீடியோ தரவிறக்கம், லைவ்டிவி, வேகமான வீடியோ ஸ்டிரீமிங்,
இதெல்லாம் சாத்தியமாகும்.அவ்வளவு ஏன்? கிரிக்கெட்ட கூட உங்க மொபைல்ல லைவ்வா பாக்க முடியும்.

* இன்டர்நெட் ரேடியோ மூலமா உலகத்துல இருக்குற ஆயிரக்கணக்கான பல்வேறு மொழி ரேடியோக்களை டிஜிட்டல் ஒலி தரத்துல நம்ம மொபைல்ல கேட்க முடியும்.

* சிறப்பான மொபைல் ஆன்லைன் கேமிங் அனுபவம் நமக்கு கிடைக்கும்.

* 3 ஜி வசதியுள்ள போன்களை நோக்கியா,சோனிஎரிக்சன்,சாம்சங், எல்.ஜி,ஹெச்.டி.சி, ஆப்பிள் போன்ற பல நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இந்த வகையான போன்கள் இந்திய பணமதிப்பில் 7000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.

*3 ஜி வசதியை பயன்படுத்த தனி சிம்கார்டு தரப்படும், அதன் மூலம் தான் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.

*இந்தியாவில் இப்போதைக்கு பி.எஸ்.என்.எல். மட்டும் இந்த "3ஜி" வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் கட்டண விபரங்களை இந்த http://www.ihackintosh.com/2009/02/tarrif-plans-for-bsnl-3g-service-in-india/ லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள் . இது ஆரம்பம் என்பதால் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் முழுமையாக வரும் போது கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது.
...................................................................................

ஐ-போனை விட நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் நூறு மடங்கு சிறந்தது - எப்படி?

செல்வந்தர்களுக்காகவே மின்னணு சாதனங்களை தயாரித்து தரும் நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம்.ஆமாம் இந்த நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்கள் எல்லாமே பணக்காரர்களால் மட்டுமே வாங்கமுடியும். அந்த அளவுக்கு விலை அதிகமாக இருக்கும் .

பணக்காரர்களும் தங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களாக காட்டிக்கொள்ள பணத்தை தண்ணியாக செலவு செய்து இந்நிறுவன பொருள்களை வாங்கி உபயோகிப்பார்கள். இந்த நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்களில் அதிகமான வசதிகள் இருக்கிறதோ இல்லையோ? கண்டிப்பாக வடிவமைப்பு அபாரமாக இருக்கும். அதில்தான் எல்லோரும் மயங்கி விடுவார்கள். அந்த மயக்கத்தில் இல்லாத சிலவசதிகள் வாங்குவோருக்கு பெரிதாக தெரியாது.அது தான் இந்த நிறுவன வெற்றியின் ரகசியம்.

பொதுவாக நாம் பணம் கொடுத்து வாங்குகின்ற சாதனங்களில் கொடுக்கின்ற பணத்திற்கு உள்ள வசதிகள் உள்ளனவா? என்று பார்த்து வாங்க வேண்டும்.ஆனால் பெரும்பாலானோர் அப்படி செய்வதில்லை. வாடிக்கையாளர்களின் இந்த மனநிலையை ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.

கம்ப்யூட்டர், ஐபாட் போன்ற சாதனங்களை தயாரித்து வழங்கிவரும் ஆப்பிள் நிறுவனம் செல்போன் சந்தையிலும் இறங்க 'ஐபோன்' என்ற தனது தயாரிப்பை களம் இறக்கியது. 16GB நினைவகம் கொண்ட போனின் விலை 39,000 விலைக்கும், 8GB நினைவகம் கொண்ட போன் 37,000 என்ற விலைக்கும் அறிமுகப்படுத்தியது.ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் பல வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள், சிலபேர் ஷோரூம்களுக்கு முன்னாள் இரவுமுழுவதும் காத்துக்கிடந்து வாங்கினார்கள். தனது தயாரிப்புக்கு உள்ள அமோக ஆதரவை பார்த்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையை அதிகரிக்க இன்னொரு தந்திரம் செய்தது.

அதாவது உலகம் முழுக்க ஒரு நேரத்தில் சாதனத்தை விற்பனைக்கு விடாமல் குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் விற்பனை செய்தது.இதனால் அறிமுகப்படுத்தப்படாத மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்த போனை எப்படியாவது வாங்கி பயன்படுத்தி பார்த்து விடவேண்டும் என்ற பேராசையை வளர்த்துவிட்டது. இதனால் ஆப்பிள் ஐ போனின் விற்பனை சூடுபிடித்தது. ஆனால் அவ்வளவு பணம் கொடுத்து வாங்கிய போன் உண்மையிலேயே கொடுத்த பணத்திற்கு உரிய வசதிகளை இருக்கின்றனவா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

'ஐபோன்' ஒரு கையால் தொட்டு இயக்கப்படும் (touch screen) போன் என்பதால் அந்த நிறுவனத்தோடு போட்டிபோட மற்ற நிறுவனங்களும் தங்கள் சார்பில் தொட்டு இயக்கும் போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய 5800xpressmusic என்ற மாடலுக்கும், ஐபோனுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. செல்போன் விற்பனையில் தாத்தாவான நோக்கியா நிறுவனம் தனது மாடலில்
ஆப்பிள் ஐபோனால் தரமுடியாதபலவசதிகளைஉட்புகுத்திஅறிமுகப்படுத்தியது.
அதில்முக்கியமானது போனின் விலை, ஆமாம் கொடுக்கின்ற காசுக்கு உரிய வசதிகளுடன் நோக்கியாவின் 5800 xpressmusic வெறும் 18,850 க்கே விற்பனை செய்யப்படுகிறது.

அப்படியானால் ஐபோனில் கொடுக்கின்ற காசுக்கு உரிய வசதிகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக இல்லை என்று சொல்லமுடியும். இங்கே ஐபோனுக்கும் நோக்கியா 5800xpressmusic போனுக்கும் உள்ள வசதிகளின் வேறுபாடுகளை பட்டியலிட்டுள்ளேன். படித்துவிட்டு நீங்களே எந்த போனை வாங்கலாம் என்று முடிவுசெய்து கொள்ளுங்கள்.

ஐபோனுக்கும், நோக்கியா 5800 xpressmusic போனுக்கும் உள்ள வசதி வித்தியாசங்கள் :

1. 1500 ரூபாய்க்கு விற்கப்படுகின்ற போன்களில் கூட F.M வசதி உள்ளது.ஆனால் ஐபோனில் இல்லை.நோக்கியா 5800 மாடலில் RDS வசதியுடன் F.M RADIO உள்ளது.

2. ஐபோனில் BLUTOOTH வசதி உள்ளது ஆனால்அதன்மூலம் பாடல்கள்,வீடியோ, ரிங்டோன் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது.ஆனால் நோக்கியாவில் இது தண்ணி பட்டபாடு .

3. ஐபோனில் கேமரா வசதி உள்ளது.ஆனால் அதில் VIDEO RECORDING செய்ய முடியாது .(மூன்றாம் தரப்பு நிறுவனம் வழங்கும் அப்ளிகேஷனை பயன்படுத்திதான் இந்த வசதியை பெறமுடியும். நோக்கியாவில் இந்த வசதி இயற்கையாகவே உள்ளது.

4.நோக்கியாவில் எம்.பி 3 பாடல்களை,வீடியோ காட்சிகளை ரிங்டோனாக பயன்படுத்த முடியும், ஆனால் ஐபோனில் முன்பே பதியப்பட்ட ரிங்டோன்களை மட்டுமே பயன்படுத்தமுடியும்.

5.நோக்கியாவில் நீங்கள் தொடர்ந்து எட்டு மணி நேரங்கள் பேசலாம், அதன் STANDBY நேரம் 406 மணிநேரம், பாட்டரியை கழற்றி மாட்ட முடியும், ஆனால் ஐபோனில் தொடர்ந்து 5 மணிநேரம் மட்டுமே பேசமுடியும், அதன் STANDBY நேரம் 300 மணி நேரம் மட்டுமே, பாட்டரியை கழற்ற முடியாது.

6. நோக்கியாவில் ஸ்பீக்கர் ஒலி அளவு மிகச்சிறப்பாக உள்ளது. ஆனால் ஐபோனில் குறைந்த அளவே கேட்கிறது.எம்.பி 3 பாடல்களை ஹெட் போன் இணைத்தால் மட்டுமே நல்ல ஒலி அளவில் கேட்க முடியும்.

7. நோக்கியாவில் DUAL LED FLASH' உள்ளது , ஆனால் ஆப்பிள் ஐபோனில் FLASH கிடையாது.

8.ஐபோனின் எடை 133 கிராம், நோக்கியாவின் எடை 109 கிராம்

9. நோக்கியாவில் 3.2 MEGAPIXELS கேமரா உள்ளது. ஐபோனில் 2MEGAPIXELS மட்டுமே.

10.ஐபோனின் திரை அளவு 3.5" INCH, நோக்கியாவின் திரை அளவு 3.2" INCH நோக்கியாவின் SCREEN RESOLUTION 640*360 என்ற அளவில் உள்ளது, ஆனால் ஐபோனில் SCREE RESOLUTION 480*320 மட்டுமே

11.நோக்கியாவில் வீடியோ கால் செய்யும் வசதி உள்ளது,ஐபோனில் இந்த வசதி இல்லை , 3G வசதி இரண்டு போன்களிலும் உள்ளது.நோக்கியாவை நம் வீட்டு 'டிவி' யுடன் இணைக்கமுடியும், ஐபோனில் அந்தவசதி இல்லை,அதே போல் ஐபோனில் VOICE DIALING வசதியும் இல்லை.

12. ஆப்பிள் ஐபோனில் பாடல்களை பணம் கொடுத்து மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும், ஆனால் நோக்கியாவில் ஒரு வருடத்திற்கு இலவசமாக பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

13.நோக்கியா சிம்பியன் O.S வகையை சார்ந்தது, இதன் மூலம் ஏராளமான மேம்படுத்தப்பட்ட வசதிகளை தொடர்ந்து பெறமுடியும், ஆனால் ஐபோன் அதன் தனிப்பட்ட MAC O.S வகையை சார்ந்தது,இதில் பெரிய அளவில் வசதிகளைப் பெற முடியாது.

14. எல்லா வற்றுக்கும் மேலாக நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக் போனின் விலை இந்தியாவில் 18,850 மட்டுமே, ஆனால் ஐபோனின் விலை இந்தியாவில் 30,000 ரூபாய்

இப்போது நீங்களே சொல்லுங்கள் ஐ-போனை விட நோக்கியா நூறு மடங்கு சிறந்ததா? இல்லையா?

வருத்தப்படாத வாலிப மனசு ?

ரொம்ப மனவேதனையோட எழுதுறேன் இந்த இடுகையை..,அப்புறம் நம்ம வீட்டுல டிவி வேலை செய்யலைனா மனசு வேதனப்படாதா என்ன?

போன வருஷம் எட்டாவது மாசத்துல சன் டைரக்ட் டி.டி.எச் வாங்கினேன். அது ஒரு வருஷம் பேக். ஒரு மூணு மாசம் யூஸ் பண்ணிட்டு ஒரு நாலு மாசம் யூஸ் பண்ணாம விட்டுட்டேன். அங்க வந்திச்சி வினை.

நாலு மாசம் கழிச்சி (அந்த இடைப்பட்ட நாலு மாசத்துல பிக் டிவி யூஸ் பண்ணிக்கி ட்டிருந்தேன்.) மறுபடியும் "சன் டைரக்ட் டி.டி.எச்" ச வீட்டுல பிக்ஸ் பண்ணி டிவி யை ஆன் பண்ணினா பாதி சேனல்கள் தெரியுது,பாதி சேனல்கள் தெரிய மாட்டேங்குது,
"e16 service is currently scrambled" ன்னு எரெர் காட்டுது. குறிப்பா தமிழ் சேனல்கள் எதுவுமே தெரியல. நானும் டெக்னிசியனை கூப்பிட்டு என்னலாமோ பண்ணி பாத்தேன். வேலைக்கே ஆகல, உடனே நான் கஷ்டமர்கேருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னா அவங்க எங்கிட்ட புதுசா ஒரு விஷயத்தை சொன்னாங்க "சார் நீங்க தொடர்ந்து நாலு மாசம் யூஸ் பண்ணாம இருந்ததுனால உங்களுக்கு படம் வர லேட்டாகும்" சரி எப்போ வரும்? இல்ல சார் கண்டிப்பா ஒரு ரெண்டு நாளைக்குள்ள வந்துடும். இப்படியே சொல்லி சொல்லி வெற்றிகரமா ஒரு மாசம் முடியப்போகுது, இன்னும் டிவியில படம் வந்த பாடில்ல..,"வரும்,ஆனாவராது" ங்கிற கதைதான். சில சேனல்கள் வருதுஆனா அது எல்லாமே நம்மள கொட்டாவி விட வெக்கிற வடக்கத்திய சேனல்கள் தான்.

தினமும் ராத்திரியில தூங்க போகும் போது தூக்கம் வர மாட்டேங்குது. திடீர்ன்னு நைட்டு ரெண்டு மணிக்கு எழுந்திரிச்சி சேனல்கள் வந்திருச்சான்னு டி.வி யை ஆன்பண்ணி பாப்பேன். மத்தியானம் சாப்புட வரும்போது பாப்பேன்,காலையில வேலைக்கு போகும் போது பாப்பேன்.வீட்டுபக்கமா போகும் போதும் ஆன்பண்ணி பாப்பேன். இப்படி தான் என்னோட தினசரி பொழுதுகள் களவாடப்படுகின்றன... என்னைக்காவது வரும்ன்னு நானும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.நீங்களே சொல்லுங்க? என்னோட வீட்டு டி.வி.யில சேனல்கள் வருமா...?வரதா..?
யாரோ அங்க "வரும் ஆனா வராது" ன்னு சொல்ற சத்தம் எனக்கு கேக்குது.

வீட்டுல சாப்பாட்டுக்கு அரிசி இல்லேன்னா கூட வருத்தப்படாத இந்த வாலிப மனசு வீட்டு டி.வியில சேனல் வரலன்னா மட்டும் எப்படி வருத்தப்படுது பாருங்க

கணினிக்கான இலவச "ஆன்டி-வைரஸ்" களில

பணம் கொடுத்து "ஆன்டி-வைரஸ்" வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் வழங்கப்படும் "ஆன்டி-வைரஸ்" தான்.

"இலவச ஆன்டி-வைரஸ்".இந்த வகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தே ஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.

ஆனால் இந்த அளவில் நமது கணினிக்கு பாதுகாப்பு போதும் என்று சிலர் இலவச
ஆன்டி-வைரஸை கணினியில் நிறுவிக்கொள்வார்கள்,அவ்வாறு நாம் பயன்படுத்தும் இலவச ஆன்டி-வைரஸ்களில் avast! antivirus ,AVG Anti-Virus Free Edition ,BitDefender Free Edition,Avira AntiVir Personal,Panda Cloud Antivirus ,ClamWin Free Antivirus,ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஆனால் இந்த நிறுவனங்கள் தரும் "ஆன்டி-வைரஸ்" கள் எல்லாமே சிறப்பாக செயல்படுகிறதா? என்றால் அது தான் இல்லை.பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டி-வைரஸ் 'avira' வழங்கும் 'இலவச ஆன்டி-வைரஸ்' தொகுப்பு தான்.

இந்த நிறுவனம் வழங்கும் "இலவச ஆன்டி-வைரஸ்" பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கு வழங்குகிறது.அது மட்டுமல்லாமல் அடிக்கடி புதுபிக்கப்படுவதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டி-வைரஸை பயன்படுத்திப் பார்த்த பல பேர் இந்த செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.

நீங்களும் பயன்படுத்தி பார்க்க இந்த 'லிங்கை' கிளிக் செய்யவும்.

http://www.free-av.com/
இன்னும் இந்தியாவில் வராத "மொபைல் நுட்பங்கள்"?

தகவல் தொடர்புத்துறையில் இந்தியா நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டிருப்பதாக அடிக்கடி நாம் செய்தித்தாள்களில் படிக்க நேர்கிறது. மே மாதத்தில் 30 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்தார்கள், மொத்த இணைப்பு 20கோடியை தாண்டிவிட்டது, உலகிலேயே சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் உள்ளது என்றெல்லாம் இந்திய அரசு பீத்திக்கொண்டாலும் உண்மையில் மிக மோசமான மதிப்பு கூட்டப்படாத சேவைகளுடன் தான் இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் சேவையை வழங்கிவருகின்றன.

பல நாடுகளில் எப்போதோ வந்துவிட்ட 3G சேவை இன்னும் இந்தியாவில் முழுமையாக செய்யல்படுத்தவில்லை. இந்த தொழில்நுட்பத்தை முதலில் சில குறிப்பிட்ட மாநகரங்களில் அறிமுகப்படுத்திய பி.எஸ்.என்.எல் நிறுவனமும் வழக்கம் போல குறைட்டை விட்டுக்கொண்டிருக்கிறது.

பொதுவாக மொபைல் நிறுவனங்கள் தரும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் GPRS,MMS,WAP PORTAL,VOICE SERVICE,CAALERTUNES,RINGTONES,WALLPAPERS,
GAMES DOWNLOADS போன்ற சேவைகள் தரப்பட்டாலும் எப்போதோ நோக்கியா மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்திய இரண்டு சேவைகள் இன்னும் இந்தியாவில் இன்னும் முழுமையாக அறிமுகப்படுத்தவில்லை, காரணம் இந்த சேவைகளை மொபைல் ஆப்ரேட்டர்கள் மூலமாகத்தான் பயன்படுத்த முடியும் .

* VISUAL RADIO - (விசுவல் ரேடியோ)

இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க நோக்கியா நிறுவனத்தை சார்ந்ததாகும், பொதுவாக நாம் மொபைலில் ரேடியோ கேட்கும் போது அந்த ரேடியோ ஸ்டேஷன் பெயர் மற்றும் அலைவரிசை எண்ணை மட்டுமே திரையில் நம்மால் பார்க்க முடியும், ஆனால் நோக்கியா கண்டுபிடித்த இந்த நுட்பம் மூலம் அந்த பாடல் இடம்பெற்ற படம் என்ன?, பாடலை பாடியது யார்?உட்பட ப்பல விபாரங்களையும், வானிலை நிலவரங்களையும் சாலைகளில் ட்ராபிக் நிலவரங்களையும் உட்பட எல்லாவற்றையும் நமது மொபைல் திரையில் நேரலையாக காண முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த நோக்கியா நிறுவனம் முதல் முறையாக அதை தாங்கள் தயாரிக்கும் மொபைல்களில் புகுத்தி அதன் சொந்த நாடான பின்லாந்து நாட்டில் சோதனை செய்து பார்த்தது, அது வெற்றி பெறவே உலகத்திலுள்ள பல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை நோக்கியா நிறுவனம் தங்களது மொபைல் சாதனங்கள் மூலம் அறிமுகப்படுத்தியது. இந்த நுட்பம் நோக்கியா போன்களில் மட்டுமே இருக்கும்,

இந்த வகை போன்கள் 5000/- என்ற விலையிலிருந்து சந்தையில் கிடைக்கிறது.குறிப்பாக நோக்கியாவின் N-SERIES போன் வகைகளில் இந்த தொழில்நுட்பம் உத்திரவாதத்துடன் உள்ளது.

* PUSH TO TALK - (புஷ் டூ டாக்)

இந்த தொழில்நுட்பம் மற்ற கம்பெனியின் மொபைல்களிலும் இருந்தாலும் நோக்கியா நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பம் உள்ள போன்களை அதிகமாக வெளியிடுகிறது.

இந்த "புஷ் டூ டாக்" தொழில்நுட்பம் ஒரு ஒரு வாக்கி-டாக்கி சமாச்சாரத்தை ஒத்ததுதான். இந்த வகை போன்களில் இதற்காகவே தனியாக ஒரு பட்டன் இருக்கும் அதனை அழுத்தி நாம் ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் ஒரே நேரத்தில் தொடர்பை ஏற்படுத்தி பேச முடியும்,

அதாவது பொதுவாக CONFERENCE கால் என்று சொல்லப்படும் வசதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பேச வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரின் நம்பரையும் டயல் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் இந்த நுட்பத்தில் அந்த நம்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக சேமித்து வைத்து விட்டால் ஒரு பட்டனை அழுத்தி ஒரே நேரத்தில் அத்தனை பேரிடமும் பேசமுடியும்.இந்த தொழில்நுட்பத்தை நமது மொபைல் ஆப்ரேட்டர்கள் உதவியால் தான் பயன்படுத்த முடியும்.

புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதனை மக்களிடம் கொண்டு செல்லும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மட்டுமே இன்னும் முயலோடு போட்டியில் கலந்து கொண்ட ஆமையாக இருக்கிறது. எப்போது உண்மையிலேயே இந்தியா தகவல் தொழில் நுட்பத்துறையில் முன்னேறும்?

பின்குறிப்பு - 1 : அ(ச)ண்டை நாடான இலங்கையில் 3G சேவை வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் அதன் அண்ணன் இந்தியாவில் இன்னும் அதன் அரிச்சுவடையே காணும்.

பின்குறிப்பு - 2: இந்த இரண்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மொபைல்களை நோக்கியா நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே சந்தையில் அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் இங்குள்ள மொபைல் ஆப்ரேட்டர் நிறுவனங்கள் இந்த சேவைகளை முழுமையாக தர அக்கறை காட்டவில்லை.அதனால் நோக்கியா நிறுவனம் புதிதாக தயாரித்து வெளியிடும் பெரும்பாலான மொபைல்களில் இந்த தொழில்நுட்பங்களை பார்க்க முடிவதில்லை.
இனிமே "கணினி-டிவி" எல்லாமே ஒன்னுதான்..?



ஆமாங்க..,இனிமே கணினிக்கென்று தனியாக ஒரு எல்.சி.டி மானிட்டர், டி.வி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கென்று ஒரு. எல்.சி.டி டி.வி என்று இரண்டு சமாச்சாரங்கள் நமக்கு தேவை இல்லை.

மாறாக கணினி மானிட்டராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் எல்.சி.டி டி.வி யாகவும் செயல்படக்கூடிய எல்.சி.டி மானிட்டர்கள் சந்தையில் அறிமுகமாகி விட்டன.இந்த வகை எல்.சி.டிக்கு "எல்.சி.டி மானிட்டர் டி.வி என்று" பெயர்.


இந்த வகை மானிட்டர்களை டி.வியாகவும்,கணினி மானிட்டராகவும் பயன்படுத்தி கணினி வேலைகளையும் செய்ய முடியும், டி.வி நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும்.

இந்த வகை டி.வி களை முதல் முறையாக சந்தையில் "எல்.ஜி" நிறுவனம் தான் அறிமுகப்படுத்தி உள்ளது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் எல்.சி.டி டி.வி களின் விலையை விட இந்த வகை எல்.சி.டிகள் விலை குறைவாக உள்ளது.

எல்.ஜி நிறுவனம் 18.5” Wide என்ற அளவில் அறிமுகப்படுத்தி உள்ள எல்.சி.டி யின் விலை MRP: Rs 12990 தான்.ஆனால் இதை கடைகளில் போய் வாங்கும் போதும் இன்னும் குறைவாக இருக்கும். இதே அளவில் உள்ள எல்.சி டி டிவி யின் விலை MRP: Rs 14000 ரூபாய் என்ற விலையில் உள்ளது.

D-Sub,DVI-D PC Audio I/P,Composite, S-Video என்று டி.வி மற்றும் கணினிக்குரிய எல்லா அம்சங்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

இதனால் நம் வீட்டில் தனித்தனியாக மானிட்டர்களை வைத்து இடத்தையும் அடைத்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

எல்.ஜி.நிறுவனத்தை தொடர்ந்து benq,samsung உட்பட பல நிறுவனங்கள் இந்த வகை எல்.சி.டி களை தயாரித்து சந்தையில் களமிறக்க தயாராகி வருகின்றன.

இதனால் எல்.சி டி டி.விக்களின் விற்பனை கணிசமாக குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
NewsPaanai.com Tamil News Sharing Site
http://www.youtube.com/watch?v=IiIL-w_jD8o
http://www.youtube.com/watch?v=IiIL-w_jD8o

ஞாயிறு, 19 ஜூலை, 2009


MySpace Graphics

MySpace Graphics

new2

Pink Images View Photos Pink Pics
OwnSkin Preview
Download To Mobile Phone: eyes
OwnSkin Preview
Download To Mobile Phone: vijay&ajith
OwnSkin Preview
Download To Mobile Phone: talmahal
from  froz_aliOwnSkin Preview    
Download To Mobile Phone: animated

OwnSkin Preview

free themes  

Download To Mobile Phone: animated new LOVEKEYS♥ 2                        
OwnSkin Preview
Download To Mobile Phone
OwnSkin Preview
Download To Mobile Phone: frozali

new

new