திங்கள், 20 ஜூலை, 2009

வருத்தப்படாத வாலிப மனசு ?

ரொம்ப மனவேதனையோட எழுதுறேன் இந்த இடுகையை..,அப்புறம் நம்ம வீட்டுல டிவி வேலை செய்யலைனா மனசு வேதனப்படாதா என்ன?

போன வருஷம் எட்டாவது மாசத்துல சன் டைரக்ட் டி.டி.எச் வாங்கினேன். அது ஒரு வருஷம் பேக். ஒரு மூணு மாசம் யூஸ் பண்ணிட்டு ஒரு நாலு மாசம் யூஸ் பண்ணாம விட்டுட்டேன். அங்க வந்திச்சி வினை.

நாலு மாசம் கழிச்சி (அந்த இடைப்பட்ட நாலு மாசத்துல பிக் டிவி யூஸ் பண்ணிக்கி ட்டிருந்தேன்.) மறுபடியும் "சன் டைரக்ட் டி.டி.எச்" ச வீட்டுல பிக்ஸ் பண்ணி டிவி யை ஆன் பண்ணினா பாதி சேனல்கள் தெரியுது,பாதி சேனல்கள் தெரிய மாட்டேங்குது,
"e16 service is currently scrambled" ன்னு எரெர் காட்டுது. குறிப்பா தமிழ் சேனல்கள் எதுவுமே தெரியல. நானும் டெக்னிசியனை கூப்பிட்டு என்னலாமோ பண்ணி பாத்தேன். வேலைக்கே ஆகல, உடனே நான் கஷ்டமர்கேருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னா அவங்க எங்கிட்ட புதுசா ஒரு விஷயத்தை சொன்னாங்க "சார் நீங்க தொடர்ந்து நாலு மாசம் யூஸ் பண்ணாம இருந்ததுனால உங்களுக்கு படம் வர லேட்டாகும்" சரி எப்போ வரும்? இல்ல சார் கண்டிப்பா ஒரு ரெண்டு நாளைக்குள்ள வந்துடும். இப்படியே சொல்லி சொல்லி வெற்றிகரமா ஒரு மாசம் முடியப்போகுது, இன்னும் டிவியில படம் வந்த பாடில்ல..,"வரும்,ஆனாவராது" ங்கிற கதைதான். சில சேனல்கள் வருதுஆனா அது எல்லாமே நம்மள கொட்டாவி விட வெக்கிற வடக்கத்திய சேனல்கள் தான்.

தினமும் ராத்திரியில தூங்க போகும் போது தூக்கம் வர மாட்டேங்குது. திடீர்ன்னு நைட்டு ரெண்டு மணிக்கு எழுந்திரிச்சி சேனல்கள் வந்திருச்சான்னு டி.வி யை ஆன்பண்ணி பாப்பேன். மத்தியானம் சாப்புட வரும்போது பாப்பேன்,காலையில வேலைக்கு போகும் போது பாப்பேன்.வீட்டுபக்கமா போகும் போதும் ஆன்பண்ணி பாப்பேன். இப்படி தான் என்னோட தினசரி பொழுதுகள் களவாடப்படுகின்றன... என்னைக்காவது வரும்ன்னு நானும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.நீங்களே சொல்லுங்க? என்னோட வீட்டு டி.வி.யில சேனல்கள் வருமா...?வரதா..?
யாரோ அங்க "வரும் ஆனா வராது" ன்னு சொல்ற சத்தம் எனக்கு கேக்குது.

வீட்டுல சாப்பாட்டுக்கு அரிசி இல்லேன்னா கூட வருத்தப்படாத இந்த வாலிப மனசு வீட்டு டி.வியில சேனல் வரலன்னா மட்டும் எப்படி வருத்தப்படுது பாருங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக