செவ்வாய், 30 மார்ச், 2010

இனி தொலைபேசியில் இணையத்தை கையாளலாம்

இனி தொலைபேசியில் இணையத்தை கையாளலாம், ஆமாங்க உங்கள் சாதாரண தொலைபேசியில் இருந்து இணையத்தை கையாளலாம்.

IBM இந்தியா ஆராய்ச்சிக்கூடம் புதிய வரைமுறையை கண்டுபிடித்துள்ளது. (HSTP) – Hyper Speech Transfer Protocol என்று அழைக்கப்படும் இந்த வரைமுறை மூலம் உங்கள் தொலைபேசியில் இருந்து அழைத்து இணையத்தில் உலா வரலாம்.






இன்று நாம் (HTTP) Hyper Text Transfer Protocol என்று சொல்லப்படும் வரைமுறையை உபயோகித்துக் கொண்டிருக்கிரோம். இந்த HTTP வரையறை மூலம் தான் நாம் இணயதளத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

(எடு. கா) http://www.tamiltech.info இந்த முகவரியில் முதல் முன்று எழுத்துக்கள் (http) வரைமுறையை குறிக்கிறது.

IBM கண்டுபிடித்துள்ள இந்த HSTP (Hyper Speech Transfer Protocol) analog signalலை (அதாவது நாம் பேசும் குரல்) Digital வடிவத்தில் அதாவது கணினி மொழிக்கு(0101010) மாற்றுவதே இதன் வேலை.

இந்த வரைமுறை புழக்கத்தில் வந்தால் வேலைகளை இன்னும் சுலபமாக முடிக்கலாம், தொலைபேசியில் அழைத்து கூகிளில் ஏதேனும் தேடனும் என்றால் நீங்கள் பேசினால் போதும் உங்களுக்கு முடிவு தொலைபேசியிலேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.